ஹதீஸ் கூட்டுச் சேருதல்

ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அஸர் தொழுகை தொழுதுவிட்டு, ஒட்டகத்தை அறுப்போம். அது பத்துப் பங்குகளாகப் பங்கு போடப்படும். சூரியன் மறைவதற்கு முன் நாங்கள் (அதன்) சமைக்கப்பட்ட இறைச்சியை உண்போம்.

Reference : Sahih al-Bukhari 2485 In-book reference : Book 47, Hadith 3 USC-MSA web (English) reference : Vol. 3, Book 44, Hadith 665

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அஷ்அரீ குலத்தினர் போரின்போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்துவிட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய்விட்டால் தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன். என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

Reference : Sahih al-Bukhari 2486 In-book reference : Book 47, Hadith 4 USC-MSA web (English) reference : Vol. 3, Book 44, Hadith 666

அனஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடமையாக்கிய (ஸகாத் என்னும்) ஸதகாவைப் பற்றி எனக்கு அபூ பக்ர்(ரலி) எழுதும்போது, 'இருவருக்குக் கூட்டாக உள்ள பொருட்களில் ஒருவர், தன் பொருட்களின் ஸகாத்துடன் மற்றவருடைய பொருட்களின் ஸகாத்தையும் சேர்த்து, தானே செலுத்திவிடுவாராயின், அவர் தன் கூட்டாளியின் பங்குக்குச் சமமான ஸகாத் தொகையைக் கணக்கிட்டு அதை அவரிடமிருந்து பெற்றுக் கொள்வார்' என்று குறிப்பிட்டார்கள்.

Reference : Sahih al-Bukhari 2487 In-book reference : Book 47, Hadith 5 USC-MSA web (English) reference : Vol. 3, Book 44, Hadith 667

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஒருவர் (தோழர்களுடன் உண்ணும் போதும்) தன் தோழர்கள் அனுமதிக்காத வரை, இரண்டு பேரீச்சம் பழங்களை ஒரு சேர எடுத்து உண்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

Reference : Sahih al-Bukhari 2489 In-book reference : Book 47, Hadith 7 USC-MSA web (English) reference : Vol. 3, Book 44, Hadith 669

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். (இருவருக்குச் சொந்தமான சொத்தில் தம் பங்கை ஒருவர் விற்கும்போது, தம் பங்காளிக்கே அவர் முன்னுரிமை, அளிக்க வேண்டும் என்னும்) 'ஷுஃப்ஆ' சட்டத்தைப் பங்கிடப்படாமலிருக்கும் கூட்டுச் சொத்து ஒவ்வொன்றிலுமே நபி(ஸல்) அவர்கள் விதித்திருந்தார்கள். எல்லைகள் வகுக்கப்பட்டு, பாதைகள் பிரிக்கப்பட்டால் ஷுஃப்ஆ(வின் உரிமை பங்காளிக்குக்) கிடையாது.

Reference : Sahih al-Bukhari 2495 In-book reference : Book 47, Hadith 13 USC-MSA web (English) reference : Vol. 3, Book 44, Hadith 67

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். 'பங்கிடப்படாத ஒவ்வொரு சொத்திலும் (அதிலுள்ள தம் பங்கை ஒருவர் விற்க முனைந்தால் அவரைத் தவிர உள்ள) பிற பங்காளிகளுக்கு ஷுஃப்ஆவின் உரிமையுண்டு' என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். எல்லைகள் வகுக்கப்பட்டு, பாதைகள் பிரிக்கப்பட்டால் ஷுஃப்ஆ(வின் உரிமை பங்காளிகளுக்குக்) கிடையாது.

Reference : Sahih al-Bukhari 2496 In-book reference : Book 47, Hadith 14 USC-MSA web (English) reference : Vol. 3, Book 44, Hadith 676

சுலைமான் இப்னு அபீ முஸ்லிம்(ரஹ்) அறிவித்தார். நான் அபுல் மின்ஹால்(ரஹ்) அவர்களுடன் உடனுக்குடன் செய்யும் நாணயமாற்று வியாபாரம் குறித்துக் கேட்டேன். அப்போது அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள். நானும் என் வியாபாரக் கூட்டாளி ஒருவரும் ஒரு பொருளை (சிறிது) உடனுக்குடனும் (சிறிது) தவணை முறையிலும் வாங்கினோம். அப்போது பராஉ இப்னு ஆஸிப்(ரலி) எங்களிடம் வந்தார்கள். நாங்கள் அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டோம். அதற்கு அவர்கள், 'நானும் என்னுடைய கூட்டாளியான ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களும் இந்த வியாபாரத்தைச் செய்து வந்தோம். நபி(ஸல்) அவர்களிடம் இது குறித்துக் கேட்டோம். அதற்கு அவர்கள், 'உடனுக்குடன் மாற்றியதை எடுத்துக் கொள்ளுங்கள்; ஆனால், தவணை முறையில் மாற்றிக் கொண்டிருப்பீர்களாயின் அதை ரத்துச் செய்யுங்கள்' என்று பதிலளித்தார்கள்' எனக் கூறினார்கள்.

Reference : Sahih al-Bukhari 2497 In-book reference : Book 47, Hadith 15 USC-MSA web (English) reference : Vol. 3, Book 44, Hadith 677

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் நிலங்களை யூதர்களுக்கு, அவற்றில் அவர்கள் உழைத்து விவசாயம் செய்ய வேண்டும் என்றும், அவற்றிலிருந்து கிடைக்கும் விளைச்சலில் 'பாதி அவர்களுக்குரியது (பாதி இஸ்லாமிய அரசுக்குரியது)' என்றும் நிபந்தனையிட்டு (குத்தகைக்குக்) கொடுத்துவிட்டார்கள்.

Reference : Sahih al-Bukhari 2499 In-book reference : Book 47, Hadith 16 USC-MSA web (English) reference : Vol. 3, Book 44, Hadith 678

உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் சில ஆடுகளைத் தம் தோழர்களிடையே பங்கிடும்படி கொடுத்தார்கள். (அவ்வாறே நான் பங்கிட்டு விட்டேன்.) ஓர் ஆட்டுக்குட்டி எஞ்சியது. அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது, 'அதை நீ குர்பானி கொடுத்து விடு' என்று கூறினார்கள்.

Reference : Sahih al-Bukhari 2500 In-book reference : Book 47, Hadith 17 USC-MSA web (English) reference : Vol. 3, Book 44, Hadith 679

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்துவிடுகிறவரிடம் போதிய செல்வம் இருக்குமாயின் அவ்வடிமை முழுவதுமாக விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லையெனிறல், (விடுதலையாகாத மீதிப் பங்கையும் விடுவித்துக் கொள்வதற்காக அவ்வடிமை உழைத்துச் சம்பாதிக்க அனுமதிக்கப்பட வேண்டும். அவ்வடிமையின் மீது (தாங்க முடியாத) சிரமத்தை சுமத்தக் கூடாது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Reference : Sahih al-Bukhari 2504 In-book reference : Book 47, Hadith 20 USC-MSA web (English) reference : Vol. 3, Book 44, Hadith 682